சென்னை, மார்ச் 22 - இந்தியா கூட்டணியின் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதி யில் திமுக வேட்பாளராக மீண்டும் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதி, சைதாப்பேட்டை, விருகம் பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், வேளச் சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. 9 லட்சத்து 93 ஆயிரத்து 590 ஆண் வாக்கா ளர்கள், 10 லட்சத்து 13 ஆயிரத்து 772 பெண் வாக்காளர்கள், 454 மூன்றாம் பாலினத்தவர் என 20 லட்சத்து 7 ஆயிரத்து 816 பேர் வாக்களிக்க உள்ள னர். இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக மீண்டும் கவிஞர், எழுத் தாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியன் (வயது 61) போட்டியிடு கிறார்.
முனைவர் பட்டம் பெற்ற இவர் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டி யிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தனை விட 2.62 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இவருடைய தந்தை தங்கபாண்டி முன்னாள் அமைச்சர் என்பதும், தற்போதைய மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இவரது சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டி யனை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் மக்களவை உறுப்பினர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தமிழகத்திற்கு பாஜக நிவாரணம் வழங்காதது, ஒன்றிய அரசின் தவறான மக்கள் நல மற்றும் பொருளாதார கொள்கைகள் ஆகியவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாஜகவின் அடிமை போல் இருந்த அதிமுக, தற்போது கூட்டணியில் இருந்து விலகி போட்டியிட்டாலும், அரசியல் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு, கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தோடு, நாடாளுமன்றத்தில் மாநில நலனுக்காக வலிமையாக குரல் கொடுத்து வருவது, வலிமையான இந்தியா கூட்டணி போன்றவை திமுக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்கிறது.