tamilnadu

தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு...

சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொடர் பாதிலேயே முடிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தொடரை ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்பதால், தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதால் சட்டப்பேரவை கூட்டத்தை காலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.  மூன்று நாட்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இந்த இக்கட்டான கால கட்டத்திலும் பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் சிறப்பாக நடத்த அனைத்து வகையிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தனிக் கவனம் செலுத்தினர்.

முன்னதாக உரையாற்றிய சட்டப் பேரவைத் தலைவர் தனபால்,”வைரஸ் தொற்று காரணமாக பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டது.  முதலமைச்சர், அமைச்சர்கள்,எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற பிற கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்கள், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசு உயரதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரைக்கும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழு ஒத்துழைப்பை கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

;