tamilnadu

img

வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு

சென்னை:
வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் ‘நிகழ்நேர வெள்ள முன்கணிப்பு’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளத்தால் ஏற்படும் பெரும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில்அமெரிக்க நாட்டில் இருப்பதை போன்ற நிகழ்நேர வெள்ள முன்  கணிப்பு திட்டத்தை செயல்படுத்த நீண்ட ஆய்வுக்கு பின்னர் அரசு முன்வந்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து 4837 சதுர கிமீ உள்ளடங்கிய வெள்ள முன்கணிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்ட மைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை இணைந்து செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத் திற்கான பணிகள் துவங்கியுள்ளன.
கோவளம், அடையாறு, கூவம்,கொசஸ்தலையாறு, ஆரணியாறு மற்றும் அவற்றை சுற்றியுள்ள சிறு நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நகரப்பகுதிகளை கண் கணிப்பதற்கான வரைப்படம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. 

தாழ்வான பகுதி, சமநிலை பகுதி, மேடான பகுதி என தனித்தனியே பிரித்து கனமழை பெய்தால் முதலில் எந்த பகுதியில் வெள்ளம் பாதிக்கும் என்பதை கண்டறியும் வகையில் டிஜிட்ட லாக வரைபடத்தை மத்திய நிறு வனமான சர்வே ஆப் இந்தியா தயாரித்து வருகிறது.   பருவமழை, புயல் மற்றும் பேரிடர் காலத்தில் பெய்யும் மழை அளவானது வானிலை ஆய்வு மையத்தின் உதவியோடு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த பணிகளுக்காக மூன்று கண்காணிப்பு மற்றும் கட்டுப் பாட்டு மையங்கள் குறிப்பிட்ட மூன்றுமாவட்டங்களில் அமைக்கப்பட வுள்ளது. மேலும் நீர்நிலைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அளவை கணக்கிடும் வகையிலான கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.இதன் மூலம், கனமழை தொடர்ந்து பெய்தால்  எந்த பகுதிகளை வெள்ளம் பாதிக்கும், நீர்நிலைகள் கொள்ளளவை  எட்டும் நேரம், அவ்வாறு ஏரிகள் நிரம்பி தண்ணீர் வெளியேறினால் எந்தப்பகுதிக்குள் முதலில் தண்ணீர் வெளியேறும் உள்ளிட்ட வற்றை முன்கூட்டியே கணிக்க முடியும் .அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்கவும் வெளியேற்றவும் முடியும் என்றும்  இதனால் கடுமையான பாதிப்புகளையும் உயிர்ச் சேதகங்களையும் தவிர்க்க முடியும்என்றும்  அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.உலக வங்கியின் நிதி உதவி யுடன் செயல்படுத்த உள்ள இத்திட்ட பணிகளை முடித்து செயல்பாட்டு க்கு வர மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்களும் இத்திட்ட மேற்பார்வை பணிகளுக்கு ஆலோசனை வழங்கஉள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

;