tamilnadu

img

சென்னையில் தைவான்  தொழில்நுட்ப வாகனம்

 சென்னை,செப்.3 தைவான் நாட்டின் நவீன தொழில்நுட்ப சாதனங்களை விளக்கும் வாகனம் சென்னைக்கு வந்தது. சென்னையில் குரோம்பேட்டை மற்றும் நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் சிறிதுநேரம் நின்றபோது ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் அந்த வாகனத்தை பார்வையிட்டனர். தைவானின் அதி நவீன தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அந்த வாகனம் புதுடில்லியில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. 12 மாநிலங்களை சேர்ந்த 61 நகரங்களை அது கடந்து செல்ல உள்ளது.தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏசர்,ஏடேட்டா, ஏஐஎஃப்ஏ, ஏசுஸ், அவெர் மீடியா, டி லிங், ஜிகா பைட் உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளின் சாதனங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. தைவான் நாட்டின் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதில் இந்திய மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக தைபே உலக வர்த்தக மைய இயக்குநர் ஹெர்பென் வூ கூறினார்.