tamilnadu

img

சூரப்பா விவகாரம்: விசாரணை குழு அமைத்தது தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் மற்றும் அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் பல புகார்கள் எழுப்பப்பட்டன

அரியர் தேர்வு விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார் எழுப்பப்பட்டதாக  உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.