tamilnadu

வங்கி ஊழியர் வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு

சென்னை, ஜன.25- வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்குத் சிஐடியுவின் 16வது அகில இந்திய மாநாடு  ஆதரவு தெரிவித்துள்ளது. வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்கள் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ், உட னடியான ஊதிய உயர்வு கோரி 2020, ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரு நாட்களும், மார்ச் 11,12, 13 ஆகிய மூன்று நாட்களும் ஏப்ரல் 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திலும் நியாயமான ஈடுபட உள்ளனர். மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக பொதுத்துறை வங்கிகள் இன்று மிக மோசமான நிலை யில் உள்ளன. 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பதன் மூலம் 12 வங்கிகளாக குறைக்கப்பட உள்ளன. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான வங்கிக் கிளைகள், குறிப்பாக கிராமப்புறங்களில் மூடப்பட உள்ளன. அதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஊழி யர்கள் உபரியாக்கப்பட்டு, ஏற்கனவே கடுமையாக உள்ள வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் மோச மாகும் நிலைக்கு இட்டுச்செல்லும். பொதுத்துறை வங்கிகளின் ரூ.5.8 லட்சம் கோடி வாரக்கடனைத் தள்ளுபடி செய்த காரணத்தால் வங்கி கள் திவாலாகும் நிலை ஏற்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைத் தொடர்ந்து நீர்த்துப் போகச் செய்து அரசு ரூ.1.76 லட்சம் கோடியை எடுத்துச் சென்றது; நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் எல்லை யற்ற உரிமையுடன் புதிய நிதித்துறை வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டு வர முயற்சி நடக்கிறது. இது முந்தைய நிதித்தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு மசோதாவின் மறுவடிவமேயாகும். இதன் மூலம் வங்கிகளில் உள்ள பொதுமக்களின் வைப்புத் தொகை யைஅவ்வங்கியின் நஷ்டத்திற்கு ஈடுகட்ட வகை செய்யும் முறையில் இந்த மசோதா வடிவமைக்கப் பட்டுள்ளது. பெருமளவு காண்ட்ராக்ட்மயம், ஊழியர் தற்காலிக மயம், வங்கிப் பணிகளை வெளியே கொடுப்பது நடக்கிறது. இவற்றை எதிர்த்த வங்கித்துறை சங்கங்க ளின் வேலை நிறுத்தங்களுக்கு சிஐடியு தனது ஆத ரவை அளிக்கிறது.

;