tamilnadu

img

கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை, அக். 30- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொம்மனந்தல் பகுதியில்  தரணி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. விவ சாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கு  தர வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 55  கோடியை வழங்கக் கோரி கரும்பு விவசாயி கள் சங்கம் சார்பில் கடந்த 03 ஆம் தேதி  போளூரில் அரை நிர்வாணத்துடன்  தமுக்கடிக்  கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  ஆரணி கோட்டாட்சியர் மைதிலி முன்னிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பாக நிலுவைப்பணம் முழுவதும் தருவதாக ஆலை  நிர்வாகம்  சார்பில் ஒப்புக்கொண்டு எழுதிக்  கொடுத்தனர். இந்நிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டது போல்  ஆலைநிர்வாகம் தீபாவளிக்குள்  நிலுவை  தொகையை வழங்காததால் ஆத்திரமடைந்த  விவசாயிகள் 50 - க்கும் மேற்ப்பட்டோர் ஒன்று கூடி கரும்பு ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போளூர் வட்டாட்சியர் ஜெய வேல் மற்றும் டிஎஸ்பி குணசேகரன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத் தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளிடம் சம ரசம்பேசி இன்னும் 15 தினங்களுக்குள் கரும்பு  நிலுவைத் தொகையில் ஒரு பகுதி வழங்கப்படும் என உறுதி கூறியதின் பேரில்  அனைவரும் கலைந்து சென்றனர்.

;