tamilnadu

img

அக்கா- தம்பியின் வெற்றிப் பயணம்

“நார்வே செஸ் தொடரில் கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளனர். அக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்” என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.