புதுச்சேரி, ஜூன் 29- குலக்கல்வி முறையை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை வரைவு 2019ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மும்மொழிக் கொள்கையை தினித்து தாய்மொழிக் கல்வியை அழிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், அனைவருக்குமான கல்வியை கார்ப்பரேட் மய மாக்காதே, அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டி நெறி முறைகளை குழிதோண்டி புதைக்காதே, கல்வியை மாநில அரசின் அதிகார பட்டி யலில் இணைக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் பிர தேசத் தலைவர் ஜெயபிர காஷ், செயலாளர் வின்னரசு, மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன், திமுக மாணவர் அணி தலை வர் மணிமாறன், அனைத் திந்திய மாணவர் பெரு மன்றம், இந்திய தேசிய மாண வர் காங்கிரஸ், முற்போக்கு மாணவர் கழகம், புதுச்சேரி மாணவர் இளைஞர் முன் னேற்ற இயக்கம், புரட்சிகர மாணவர் மற்றும் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பு களைச் சேர்ந்த கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தை வாழ்த்தி திமுக மாநில தெற்குபிரிவு அமைப்பாளார் சிவா எம்.எல்.ஏ. பேசினார்.