நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் சங்கம் உறுதிமொழி
விழுப்புரம், செப். 2- நீட் தேர்வுக்கு எதிராக உயிரிழந்த எஸ்.அனிதா நினைவு நாளில் நீட் தேர்வுக்கு எதிரான உறுதிமொழியை இந்திய மாணவர் சங்கத்தினர் ஏற்றனர். இதற்கான நிகழ்ச்சி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் எம்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்டத் தலைவர் சுபித்ரா, துணை செயலாளர் யு.தீபன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரசாந்த் உட்பட 40 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.