tamilnadu

img

உறுதிமிக்க தலைவர் எஸ்.ஜனார்த்தனன்.... அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி....

சென்னை:
உறுதிமிக்க தலைவராக விளங்கியவர் தோழர் எஸ்.ஜனார்த்தனன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் யூனியன் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றிவர் தோழர் எஸ்.ஜனார்த்தனன். கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு கடந்தாண்டு ஆக.8ந் தேதி காலமானார். அவரது முதலாமாண்டு நினைவு கல்வெட்டு, படத்திறப்பு நிகழ்வு ஞாயிறன்று (ஆக.8) அனகாபுத்தூரில் நடைபெற்றது.

தோழர் எஸ்.ஜனார்த்தனின் நினைவு கல்வெட்டையும், உருவப் படத்தையும் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், 1974ம் ஆண்டு தாம்பரத்தில் பதுக்கல் அரிசி, பருப்புகளை எடுத்து விநியோகித்தது, என்.ராம், தன்னையும் சிறையில் அடைத்தது, அதன்பின் நடந்த பாராட்டு விழாவில் வி.பி.சிந்தனுடன், ஜனார்த்தனும் பங்கேற்றது போன்றவற்றை நினைவு கூர்ந்தார். ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ 2ம் தொகுதியில் தோழர் ஜானார்த்தனின் வரலாற்றை பதிவு செய்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.“சென்னை மாநகரத்தில் 1970களில் தொழிற்சங்க பணியாற்றிய மகத்தான தலைவர்களில் ஒருவர் எஸ்.ஜனார்த்தனன். ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிற்சங்க தேர்தலில் தலைவராக மாறிமாறி தேர்ந்தெடுக் கப்பட்டாலும், பொதுச் செயலாளராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர் அவர். தொழிலாளர்களால் நேசிக் கப்பட்ட தலைவராக இருந்தார்.

கட்சியின் பகுதிச் செயலாளர், அலுவலக செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினராக உயர்ந்தவர். பன்முக ஆளுமை கொண்ட அவர், நேர்மையாக, கறார் தன்மையோடு இருந்தார். என்.சங்கரய்யா அறிவுறுத்துவதுபோல், தன் குடும் பத்தை கட்சிக் குடும்பமாக மாற்றியவர். அவரை பின் தொடர்வோம்.” என்றார்.

கலங்காதவர்
மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் குறிப்பிடுகையில், “வெளிப் படையான மனிதராக திகழ்ந்த னார்த்தனன் பன்முக தன்மை வாய்ந்தவராக இருந்தார். நேர்மையாளராக விளங்கினார். பிரச்சனைகளை கண்டு கலங்காமல், அவற் றிற்கு தீர்வு காண முயற்சிப்பார்” என்றார்.“வயது வித்தியாசமின்றி இளந் தோழர்களோடு பழகக் கூடியவர். திட்டமிடல்களை கற்றுக் கொடுப்பவர். கறார் தன்மையை வலியுறுத்தியவராக இருந்தார்” என்று மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் கூறினார்.கல்வெட்டு திறப்பு நிகழ்வுக்கு எஸ்.வெங்கட்ராகவலுவும், படத் திறப்பு நிகழ்வுக்கு கட்சியின் பல்லாவரம் தொகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரனும் தலைமை தாங்கினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.நரசிம்மன், தொகுதிக்குழு உறுப்பினர்கள் பி.ஜீவா, ஜி.ராஜேந்திரன், ஆர்.ஹேமக்குமார், திமுக பிரமுகர் ஸ்ரீதர், சிபிஎம் நிர்வாகிகள் பி.குமார், மாதவன், தோழர் ஜனார்த்தனனின் மனைவி நிர்மலா, மகன் நவீன் உள்ளிட்டோர் பேசினர்.

;