tamilnadu

தமிழ்நாட்டில் புயல் மழை பாதிப்பு: முதலமைச்சரிடம் பிரதமர் விசாரிப்பு

சென்னை, டிச.7 - முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக மழை,  வெள்ளம் பாதிப்பு பற்றி கேட்டறிந் தார்.

மிக்ஜம் புயலால் சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில்  பெய்த மழையால் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கின. சென்னை யின் போரூர், காரப்பாக்கம், மணப் பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக் கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது.

 வெள்ள நீர் இன்னும் பல பகுதி களில் வடியாமல் உள்ளது. மக்கள்  உள்ளே சிக்கி இருக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. பல இடங்களில்  மின்சாரம் சீராக வழங்கப்பட வில்லை. குடிநீர் விநியோகம் தடைப் பட்டுள்ளது. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறு பக்கத்தில் அரசின் மீட்பு பணிகளின் தன்னார்வலர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், புயல் மற்றும்  கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலி னிடம் , பிரதமர் மோடி தொலைபேசி  மூலம் கேட்டறிந்தார். 4 மாவட்டங்க ளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும்  மீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விளக்கி கூறினார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் குழுவை உடனடியாக  அனுப்பி வைக்க வேண்டும் எனவும்  முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப் படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.