tamilnadu

அரபிக்கடலில்  உருவாகிறது புயல்

சென்னை, ஜூன் 1- அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதி யில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலு வடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உரு வாகியுள்ளது. மும்பையில் இருந்து 690 கி.மீ தொலைவி லும், குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 920 கி.மீ தொலைவிலும் தெற்கு - தென் மேற்கு திசை யில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, அடுத்த 24  மணி நேரத்திற்குள் மேலும் வலுவடைந்து புயலாக  உருமாறும். செவ்வாயன்று (ஜூன் 2) வடக்கு திசை  நோக்கி நகர்ந்து அதன் பின்னர் வடக்கு - வட கிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்திற்கு இடையே கரையை  கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;