tamilnadu

img

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை நிறுத்துக.... சர்வதேசக் கல்வியாளர்கள் வலியுறுத்தல்...

சென்னை:
இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்று சர்வதேசக் கல்வியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளனர். 

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் குற்றங்களைக் கண்டித்து செயல்படுகின்ற இந்தியாவில் இயங்கும் சமூக இயக்கங்களுடன் தங்களையும் இணைத்துக் கொள்வதாக, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, கிரேட் பிரிட்டன், லத்தீன்அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய பசிபிக்நாடுகளை உள்ளடக்கிய சர்வதேசக் கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும்தனிநபர்கள் அமைப்பு என்று சர்வதேச அளவில் இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னையில் ‘இந்தியாசிவில் வாட்ச் சர்வதேச அமைப்பு’ சார்பில்அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,இந்தியாவில் ஹத்ராஸ் மற்றும் பல இடங்களில் தலித் பெண்களுக்கு எதிராக ஆதிக்கச் சாதியினர் மற்றும் காவல்துறையினரால் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்த அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள 1800-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில் அரசியல் செயற்பாட்டாளர் அஞ்சலா டேவிஸ், அர்ஜுன்அப்பாதுரை, மீனா தாண்டா உட்பட சர்வதேச அமைப்புகளான அமெரிக்காவில் இயங்கும் தலித் ஒருமைப்பாடு ஃபோரம்,தேசிய மகளிர் ஆய்வு சங்கம், ஏசியன் இந்தியன் குடும்ப ஆரோக்கிய அமைப்புமுதலானவையும் கையெழுத்திட்டிருக் கின்றன.‘இந்தியாவில் சாதி மற்றும் ராணுவ மயமாக்கப்பட்டுள்ள முதலாளித்துவம் ஒழிக்கப்படும்போது மட்டுமே நீதி சாத்தியம்’என்றும்  அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.