tamilnadu

2 மாதத்திற்கு பிறகு ஓடிய அரசுப் பேருந்துகள்

சென்னை, ஜூன் 1- தமிழகம் முழுவதும் 2 மாதங்க ளுக்குப் பிறகு அரசுப் பேருந்துகள் 50 விழுக்காடு பயணிகளு டனும் சுகா தாரத்துறையின் கடுமையான விதி களைப் பின்பற்றியும் ஜூன் 1 முதல் இயங்கத் தொடங்கி யுள்ளன. தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேருந்துகள் இயங்க  தொடங்கியது. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து திருவண்ணா மலை, திருக்கோவிலூர், செஞ்சி, ஆரணி, கடலூர், பண்ருட்டி, சிதம்ப ரம், புவனகிரி ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம் நகர எல்லை யான ஒலக்கூர் பகுதிக்கும் பேருந்து கள் இயங்கியது. விழுப்புரம் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் பயணிக ளின் வருகை வெகு குறைவாகவே காணப்பட்டது. பொதுவாக பேருந்து கள் இயங்கி வந்த நாட்களில் விழுப்பு ரம் பேருந்து நிலையம் பொது மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும்.

ஊரடங்கு தளர்வை  தொடர்ந்து விழுப்புரம் பஸ் நிலை யங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் பயணிகளின் குறைவாகவே இருந்ததால் பேருந்து  நிலையம் வெறிச்சோடி காணப் பட்டது. கள்ளக்குறிச்சியில்  கிராமப் புறங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. தொலை தூரங்களுக்கு அனுப்பப்ப டும் சிறப்பு பேருந்துகள் ஒவ்வொன்றி லும் குறைந்தபட்சம் 30 பயணிகள் வந்த பின்னரே இயக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி பேருந்து நிலை யத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்து களில் பயணம் செய்ய பயணிகள் இல்லாததால் 10 விழுக்காடு மட்டுமே  இயக்கப்பட்டன. வேலூரிலிருந்து மாவட்ட  எல்லைக்குள் 130 அரசுப் பேருந்து களும் அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய  மாவட்டங்களுக்கு 100 பேருந்து களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை கோட்டத்தில் ஆயிரத்து 326 பேருந்துகள் இயக்கப்பட்டன.  இம்மாவட்டத்தை பொறுத்தவரை 539 பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கின்றன. கோவை திருப்பூர், நீலகிரி,  ஈரோடு, கரூர், சேலம் நாமக்கல் ஆகிய  மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் மட்டும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நீலகிரி மாவட்டம்  உதகை, குன்னூர், கூடலூர் உட்பட  மாவட்டதில் உள்ள 6 தாலுக்கா விற்கும், மேட்டுப்பாளையம்,  கோவை ஆகிய ஊர்களுக்கும், பொள்ளாச்சியில் இருந்து அரு காமை நகரங்கள் கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி யது. திண்டுக்கல் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5  மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கம்  தொடங்கியது. அதேபோல் நகர பேருந்து சேவையும் தொடங்கியுள் ளது. 57 இருக்கைகள் கொண்ட நகரப் பேருந்தில் 36  பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 நகரப் பேருந்துகளும் 122 புறநகர்  பேருந்துகளும் தற்போது இயக்கப் படுகிறது. நாகை பணிமனையில் இருந்து  33 பேருந்துகளும் சீர்காழி பணி மனையில் இருந்து 23 பேருந்துகள் மட்டுமல்லாது, மயிலாடுதுறை வேதாரணியம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோ, டாக்சிகள் சென்னையில் 68 நாட்களுக்கு பிறகு, ஆட்டோ மற்றும் வாடகை கார்  கள் இயங்கத் தொடங்கியுள்ளன. 5ஆம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி முதல் சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.  

இதனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை முழுவ தும் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கால்டாக்சி உள்ளிட்ட வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர  மூன்று பேர் பயணிக்க அனு மதிக்கப்படுகிறது. சென்னையில் அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என்றாலும், டாக்சிகள் அதிக அள வில் இயங்கத் தொடங்கவில்லை. கட்டணங்களை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை நிலுவை யில் உள்ளதால் ஓலா மற்றும் உபேர்  கால் டாக்சி ஓட்டுநர்கள், கார்களை இயக்கவில்லை என கூறப்படுகிறது.