ஸ்ரீரங்கம் முன்னாள் மாணவர்கள் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. போட்டியில் ஆண்கள் அணி 39, பெண்கள் அணி 17 என 14 மாவட்டங்களை சேர்ந்த 56 அணிகள் கலந்து கொண்டன. தொடக்க விழாவில், தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழக செயலாளர் எழிலரசன், துணைத்தலைவர் சீனிவாசன், திருச்சி மாவட்ட தலைவர் குணசேகரன், செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மாணவர்கள் பூப்பந்து கழக தலைவர் ராமசாமி, ஸ்ரீரங்கம் கல்வி சமுதாய செயலாளர் கஸ்தூரி ரெங்கன், செயலாளர் குருராகவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.