tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடரும்: ஸ்டாலின்

சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திங்களன்று(நவ.11)நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில், வரும் 16 ஆம் தேதி பொதுக் கூட்டங்களை நடத்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

;