டிபிஐ அலுவலகம் முற்றுகை: சிறப்பு பயிற்றுநர்கள் கைது
சிறப்பு பயிற்றுநர்கள் 25 ஆண்டுகள் பணி காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2015 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் வைப்பு நிதி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு திட்டத்தில் அனைத்து பணியாளர்களையும் புறக்கணிக்காமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை (செப்.10) சென்னையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம் (டிபிஐ) முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுனர்களை கைது செய்த காவல்துறையினர் பின்னர் விடுவித்தனர்.