திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்
புதுக்கோட்டை, டிச.6 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 60 திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களுக்கான வீட்டுமனைப் பட்டா, சிறு தொழில் கடன், ஆதார் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிட வேண்டி அளித்த பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டன. மேலும் இம்மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இம்முகாமில் திருநங்கைகளுக்கு ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிக்கான ஆலோசனையும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதற்கான கடனுத விகள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது” என்றார்.
இணையவழி விளையாட்டுகளின் தீய விளைவுகள்: விழிப்புணர்வு கட்டுரை போட்டி
அறந்தாங்கி, டிச.6- புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டியை மணமேல்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார். நடுவர்களாக முதுகலை ஆசிரியர் வெற்றிச்செல்வன், நளினி, பட்டதாரி ஆசி ரியர்கள் இளங்கோவடிவேல் ஜோக்கின்ராய், ஆசிரியர் பயிற்றுநர் சசிகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.
இந்நிகழ்வில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 7 மாண வர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவில் நடை பெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
பாபநாசம், டிச.6- அய்யம்பேட்டையிலிருந்து கணபதி அக்ரஹாரம் செல்லும் சாலை முடிவில், திருப்பத்தின் இரு பக்கமும் ஒளிரும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்வோர் இச்சாலை வழியாகப் பயணிக் கின்றனர். சாலை முடிவில் திருவையாறு செல்லும் சாலை, கும்பகோணம் செல்லும் சாலை என இரண்டாகப் பிரிகிறது.
கும்பகோணம்-திருவையாறு சாலையில் பல கிரா மங்கள் உள்ளன. அரியலூரிலிருந்து சிமெண்ட் ஏற்றியும், கரூர், பெரம்பலூரிலிருந்து ஜல்லி ஏற்றியும் ஏராளமான கனரக வாகனங்கள் நாகப்பட்டினம், காரைக்கால் வரை செல்கின்றன. வேகத்தடை இல்லாததால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன.
இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நெடுஞ் சாலைத் துறை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.