tamilnadu

img

தென்னிந்திய மக்கள் நாடக விழா இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தலைமையில் வரவேற்புக் குழு அமைப்பு

சென்னை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சென்னை கேரள சமாஜத்துடன் இணைந்து வரும் அக்டோபர் 2 முதல் 6 வரை சென்னையில் தென்னிந்திய மக்கள் நாடக விழாவை நடத்தவுள்ளது. இந்த மக்கள் நாடக விழாவிற்கான வரவேற்புக் குழு மற்றும் விழாக்குழு அமைப்புக் கூட்டம் ஞாயிறன்று (ஜூலை 21) சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்றது. தமுஎகச மாநிலத் துணைத்தலைவரும் திரைப்படக் கலைஞருமான ரோஹிணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைஞர் பிரளயன், மக்கள் நாடக விழாவின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் இருந்து சுமார் 20 நாடகக் குழுக்கள், மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தநாடகங்களை சிறந்த கலையம்சங்களு டன் நிகழ்த்தவிருக்கின்றன என்று குறிப்பிட்டதோடு, தற்போது தலை தூக்கி வரும் ஒற்றைக் கலாச்சார முனைப்பிற்கு முற்றிலும் மாறான பன்முகச் சிந்தனையை முன்னெடுத்து வைப்பதாக இந்த நாடகங்கள் திகழும்என்றும் தெரிவித்தார்.கேரள சமாஜம் சென்னையில் தொடங்கிய நாளில் இருந்தே மக்கள் பிரச்சனைகள் குறித்த முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்துள்ளது என்று குறிப்பிட்ட சமாஜத்தின் தலைவர் பி.கே.என். பணிக்கர், இந்த விழா சிறப்புற நடைபெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய் வோம் என்று உறுதி அளித்தார். தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்னி ந்தியாவைச் சேர்ந்த நாடகக் குழுக்கள்பங்கேற்கும் இத்தகைய மக்கள் நாடகவிழாவை தமுஎகச நடத்தி வருகிறது என்றும், 2017-ல் தென்னிந்திய மக்கள் நாடகவிழா தஞ்சையில் 29 நாடகக் குழுக்களின் பங்கேற்போடு வெற்றிகரமாக நடைபெற்றது என்றும் குறிப்பிட்டார். 

டி.எம்.கிருஷ்ணா
சென்னையில் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள நாடகவிழாவின் வரவேற்புக் குழுவில் புரவலர்கள் குழுவின் தலைவராக செயல்பட புகழ்பெற்ற இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா இசைவு தெரிவித்துள்ளது அறிவிக்கப்பட்டது.
மேலும் திரைக்கலைஞர்கள் சத்யராஜ், நெடுமுடி வேணு, இயக்கு நர்கள் ராஜூ முருகன், லெனின் பாரதி, பா.ரஞ்சித், ஆர்.ரவிக்குமார், ஆசியஇதழியல் கல்லூரி நிர்வாகி சசி குமார், முன்னாள் நீதியரசர் கே.சந்துரு,மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், மெடிமிக்ஸ் அதிபர். ஏ.வி அனுப், மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர். துரைப்பாண்டியன், சிங்கார நெடுஞ்செழியன், க.உதய குமார், இந்து ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், பிரன்ட் லைன் ஆர்.விஜயசங்கர், பேராசிரியர். அருணன், ச.செந்தில்நாதன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, வி.ஆர்.தேவிகா, பிரசன்னா ராமசாமி, தமிழச்சி தங்க பாண்டியன் எம்பி, ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 35 பேர் கொண்ட புரவலர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

மேலும் தமுஎகசவின் மாநில துணைத்தலைவர் திரைக்கலைஞர் ரோஹிணியின் தலைமையில் அமைந்த வரவேற்புக் குழுவில்இடம்பெற்றுள்ள துணைத்தலை வர்கள், இணைச்செயலாளர்கள், நிர்வாகக் குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள் ஆகியோரின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். நாடகக் கலைஞர் பிரளயன் வரவேற்புக் குழுவின்செயலாளராகவும், சென்னை கலைக்குழுவின் அசோக் சிங் பொருளாள ராகவும் செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 

;