tamilnadu

img

கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் வகுப்பறை திறப்பு

கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் வகுப்பறை திறப்பு

வேலூர், ஆக.31- வேலூர் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990ம் ஆண்டு பத்தாம் வகுப்பு ஏ பிரிவில் பயின்ற  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி விஐடி துணைத்தலைவர் கோ.வி.செல்வம்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ரூ.18 லட்சத்தில் 35 கம்ப்யூட்டர்களுடன் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கம்ப்யூட்டர் வகுப்பறையும் திறக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலெட்சுமி கலந்து கொண்டு வகுப்பறையை திறந்து வைத்து பேசுகையில், விஐடி பல்கலைக்கழக துணைத்தலை வர் கோ.வி.செல்வம் பெரிய கல்வி நிறு வனத்தை நடத்தி வந்தாலும், வேலூரில் கம்பன் கழகம், விளையாட்டு விழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஆய்வகம் போன்ற நல்ல பணிகளையும் செய்து வருகிறார்.  இதனை பார்த்து மற்றவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு செய்ய வேண்டும். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் மணிநாதன், அறக்கட்டளை உறுப்பினர் பிரசாந்த்குமார், தலைமை ஆசிரியை கவிதா, முன்னாள் ஆசிரியர்கள்  உள்பட பலர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு அகராதி, ஜெஇஇ., நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்கி விஐடி துணைத்தலைவர் கோ.வி.செல்வம் பேசுகையில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூறும் பொழுது, உங்க ளுடைய கையெழுத்து எப்பொழுது ஆட்டோ கிராப்பாக மாறுகிறதோ? அப்போது நீங்கள் வெற்றி பெற்ற மனிதர்களாக மாறிவிடுவீர்கள் என்றார். அதுபோன்ற இங்குள்ள மாணவர்கள் அனைவரும் வரும்காலத்தில் மேடையில் சிறப்பு விருந்தினர்களாக அலங்கரிக்க வேண்டும். நீங்கள் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். கடின உழைப்பும், உண்மையும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று பேசினார். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் 37 முன்னாள் மாணவ, மாணவிகள் வந்து கலந்து கொண்டனர். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) தயாளன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மணிவண்ணன், ஆசிரி யர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.