தேன்கனிக்கோட்டையில் மவுன ஊர்வலம்-புகழஞ்சலி
மாபெரும் தலைவர் கேரள முன்னாள் முதல்வர் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தளி, கெலமங்கலம் ஒன்றிய குழுக்கள் சார்பாக, புகழ் அஞ்சலிக் கூட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. கெலமங்கலம் ஒன்றியச் செயலா ளர் டி.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி.பி.ஜெயராமன், ஆர்.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனு மப்பா, மூத்தத் தோழர் டி.எஸ். பாண்டி யன், நகர காங்கிரஸ் தலைவர் தாஸ் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர். முன்ன தாக, சிபிஎம் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை மவுன ஊர்வலம் நடை பெற்றது. மறைந்த மாபெரும் தலைவர் கேரள முன்னாள் முதல்வர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு அஞ்சட்டி வட்டக் குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டச் செய லாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர்.