tamilnadu

வணிக வளாகங்கள் இன்று திறப்பு...

சென்னை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக வணிக வளாகங்கள், கோவில்கள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டன.

இந்தநிலையில் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  திங்கட் கிழமை (ஜூன 28) முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வருகிறது.அந்த வகையில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில்  வணிக வளாகங்கள் திறக் கப்படுகிறது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில்தான் வணிக வளாகங்கள் அதிகம். சிறிய வணிக வளாகங்கள் முதல் பெரிய மால்கள் வரையில்  திறக்கப்பட உள்ளது.இதையடுத்து வணிக வளாகங்களை சுத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடை
பெற்று வருகின்றன. வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் களை வைத்து இருக்க வேண்டும் என்று அனைத்து வணிக வளாக நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. முககவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கடைபிடிக்காத வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;