tamilnadu

கராத்தே ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி.க்கு மாற்றம்....

சென்னை:
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே பயிற்சி ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத் தில் கைதானார்.அவர் மீது ஏராளமான மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேத்துப் பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அண்ணாநகர் கிளையில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்பவர் மீதும் 26 வயது இளம்பெண் ஒருவர் 7 ஆண்டுக்கு பிறகு பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அண்ணாநகரை சேர்ந்த அந்த இளம் பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு கெபிராஜ் நடத்திய தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.அப்போது ஜூடோ போட்டிக்காக நாமக் கல் சென்றுவிட்டு திரும்பி காரில் வந்த போது அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கெபிராஜ் பாலியல் தொந்தரவு செய்து உள் ளார். இதற்கு ஒத்துழைக்காததால் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

இது பற்றி அந்த பெண் தற்போது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக பெண் கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கெபிராஜை கைது செய்தனர். இது பற்றிய புகார்களை பாதிக் கப்பட்ட மாணவிகள், பெண்கள் தெரிவிக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் ஆணையர் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

;