tamilnadu

img

செப்.14 கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டம்

சென்னை:
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23 ஆம் தேதியுடன் சட்டமன்ற நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. 

சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர்6 மாத இடைவெளியில் கூட்டப்பட வேண்டும். அதன்படி, வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதிக்குள் மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும்.சென்னை கோட்டையில் உள்ள சட்டமன்ற  மைய மண்டபத்தில் தனிமனித  இடைவெளியுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர இடமில்லை.இதையடுத்து சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் ஆகஸ்ட் 22 அன்று மேற்கொண்டனர்.இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டமன்றக் கூட்டம் செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.