மூத்த தோழர் சி.சுந்தரராஜ் மறைவு சிபிஎம், சிஐடியு தலைவர்கள் அஞ்சலி
அம்பத்தூர், அக். 9- வடசென்னையின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தோழரும், தொழிலாளர் இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க போராளியுமான சி.சுந்தர ராஜ் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. ஒரு சாதாரண தொழி லாளியாக வாழ்க்கை யைத் தொடங்கி, மக்கள் இயக்கத்தின் முன்னணி தலைவராக உயர்ந்த அவரது வாழ்க்கை, தியா கத்திற்கும் அர்ப்பணிப் புக்கும் உதாரணமாக திகழ்ந்தது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஸ்டெட்பாஸ்ட் என்ற தொழிற்சாலையில் கடின உழைப்பாளியாக பணி புரியும் காலத்தில், தொழி லாளர்களின் உரிமைக ளுக்காக குரல் கொடுக்கும் சிஐடியு சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கிருந்து தொடங்கிய அவரது போராட்ட வாழ்க்கை, 1975ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்த தன் மூலம் புதிய திசை யைப் பெற்றது. அம்பத்தூர் பகுதியில் அவர் உரு வாக்கிய மக்கள் செல்வாக்கு, அவரது நேர்மையான அரசிய லுக்கும் மக்களோடு மக்க ளாக இருந்த தன்மைக்கும் சாட்சியாக இருந்தது. 1981ஆம் ஆண்டு அம்பத்தூர்-ஆவடி பகுதி குழுவின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், 1982இல் கட்சியின் முதல் முழுநேர ஊழியராக தன் வாழ்க்கையையே மக்கள் சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டார். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேல் அம்பத்தூர் பகுதிச் செயலாளராக அயராது பணியாற்றிய அவர், ஜன நாயகத்தின் இருண்ட காலமான எமர்ஜென்சியின் போது காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.அம்பத்தூர், ஆவடி பகுதி களில் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் என பலதரப்பட்ட வெகுஜன அமைப்புகளை உருவாக்கி, சமூக மாற்றத்திற்கான வலு வான அடித்தளத்தை அமைத்தார். அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இன்ஜினியரிங் எம்ப்ளா யீஸ் யூனியன் துணைத் தலைவராகவும், சென்னை புறநகர் பகுதிகளில் விவ சாயிகள் சங்கம் அமைப்ப திலும் முன்னோடியாக செயல்பட்டார். கட்சி வேலையை வெறும் அரசியல் பணி யாக மட்டுமல்லாமல், வாழ்க்கை முறையாகவே கடைப்பிடித்த அவர், தன் குடும்பத்தினரையும் மக்கள் சேவை வழியில் நடக்க வைத்தார். மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழு என ஒவ்வொரு பொறுப்பிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும், மரணம் கதவைத் தட்டிய கடைசி நொடி வரையிலும் அம்பத்தூர் பகுதி மக்க ளின் துயரங்களையும் பிரச்சனைகளையும் தன் பிரச்சனையாக கருதி குரல் கொடுத்து வந்த அவரது இழப்பு அனைவரையும் உணர்வுபூர்வமாக பாதிக்கிறது. அம்பத்தூர் கள்ளிக் குப்பம் கங்கைநகர் சுந்தரய்யா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உட லுக்கு, கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு தலை வர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பி.சுந்தரராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.லோக நாதன், கே.எஸ்.கார்த்தீஷ் குமார், அ.விஜயகுமார், ஆர்.ரவிக்குமார், வி.ஜானகி ராமன், எல்.பி.சரவணத் தமிழன், இரா.முரளி, சி.திரு வேட்டை, சர்வேசன்,எஸ்.வி.வேணுகோபால், சுப.வெள்ளச்சாமி, ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் மா.பூபாலன், எம்.கோடீஸ்வரி, டி.பாபு, எம்.கமலநாதன், எம்.ராபர்ட்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி, தீக்கதிர் சென்னை பதிப்பு முன்னாள் மேலாளர் சி.கல்யாணசுந்தரம், மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், அ.ஜான், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வேம்புலி, தலைவர் முருகன், சிபிஎம் பகுதி செயலாளர் ஆர்.கோபி, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சிட்டிபாபு, தலைவர் நடராஜன், செல்வராஜ் (அதிமுக) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்களும், கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் மலர்வளை யம் வைத்து தங்கள் அன்புக்குரிய தலைவருக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தினர்.
