திமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தொமுச அகில இந்திய பொதுச் செயலாளர் மு.சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தொமுச பொருளாளர் நடராஜன், தலைவர் வே.சுப்புராமன், நெய்வேலி சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகுமார் ஆகியோர் உள்ளனர்.