காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கிளியா நகர் கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் நடுநிலைப்பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் பலர் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே உடைத்துப் போட்டுவிட்டுவருவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.