தமிழக அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி: Chemist
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.37,700 - ரூ.1,19,500
தகுதி: வேதியியல் பிரிவில் எம்,எஸ்சி., அல்லது கெமிக்கல் டெக்னாலஜி அல்லது இன்ஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி அல்லது வேதியியலாளர்கள் நிறுவனத்தின் அசோசியேட்ஷிப் டிப்ளோமா(இந்தியா) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தூய அல்லது பயன்பாட்டு வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியல் ஆகிய பாடங்களில் ஆராய்ச்சி பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 - 50க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் - ரூ.150 தேர்வுக் கட்டணம் - ரூ.200
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2022
தேர்வு நடைபெறும் தேதி: 19.03.2022
மேலும் விவரங்கள் அறிய www.tnpsc.gov.in அல்லது https://www.tnpsc.gov.in/Document/english/21_2021_CHEMIST_ENGLISH.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.