tamilnadu

img

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை கேட்டு வழக்கு

சென்னை:
நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்கும்வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 30ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாகத் தேர்தல் நடத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்பாக வெளியிட்டால், அது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் பலகட்டங்களாக நடத்தப்பட்டாலும், வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் தான் மேற்கொள்ளப்படுகிறது.எனவே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளை ஒன்றாகச் சேர்த்து வெளியிட உத்தரவிடவேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு திங்கட்கிழமை(டிச.30) விசாரணைக்கு வருகிறது.

;