tamilnadu

img

இந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம்: வைகோ

சென்னை:
இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடி முதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி  விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் கனிமொழி எம்.பி.யை “நீங் கள் இந்தியரா?” என்று வினவியுள்ளார்.இந்த சம்பவத்தையடுத்து இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? என்று கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பினார். தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் தொடர் பாக சி.ஐ.எஸ்.எப். அதிகாரியிடம் விசாரணை நடத்த சி.ஐ.எஸ்.எப். உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் தில்லி ஏகாதிபத்திய அரசாங்கத்தின் எதேச் சாதிகார தன்மைதான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது. அந்த அதிகரி மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவது இல்லை. ஒட்டுமொத்த மத்திய அரசும் இந்தி ஆதிக்கத் தைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை” என்று சாடியுள்ளார்.பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும்  இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, அரசு அதிகாரிகள் தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசின் கோப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தியிலும் தயாரிக்கப் பட வேண்டும் என்று உத்தரவுகள் போடப்பட்டன.

இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடி முதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம். பன்முகத்தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது என்பதை பாஜக உணரவில்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

;