சென்னை, மே 7- நாய்கள் சிறுமியை கடித்ததைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. இது தொடர் பாக பூங்கா கண்காணிப் பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் ஆயிரம் விளக்குப்பகுதியில் அண்மையில் இரண்டு ராட்வீலர் நாய்கள் சிறுமியை கடித்து குதறியதில் சிறு மிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு வரும் வியாழக் கிழமை அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூங்காக்க ளில் நாய்களை அழைத்து வருவதற்கு கடும் கட்டுப் பாடுகள் சென்னை மாநக ராட்சி சார்பில் விதிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நாய்களை பூங்காக்களில் அழைத்து வருபவர்கள், நாய்களின் கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வர வேண்டும். அவ்வாறு அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும்.
உரிமம் பெற்ற, தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்கா விற்குள் அனுமதிக்கப்படும். ஒரு நபர், ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்கா விற்குள் அழைத்துவர வேண்டும். பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் பகுதியில் நாய்களுக்கு அனுமதி இல்லை. இந்த வழிகாட்டுதல்களை பூங்கா காவலர்கள் முறையாக தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.