tamilnadu

நீட் தேர்வுக்கு எதிராக  இன்று சட்டமன்றத்தில் தீர்மானம்... மா.சுப்பிரமணியன்....

சென்னை:
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தற்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறுகையில் தமிழக அரசு விரும்பாத, முதல்வரின் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நிகழ்வாகத்தான் நீட் தேர்வு நடக்கிறது.  நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.அந்த வகையில், சட்டமன்ற முதல் கூட்டத் தொடரின் கடைசி நாளான 13ஆம்தேதி (நாளை), நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் முதல்வரால் கொண்டு வரப்பட உள்ளது. அத்துடன், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல, அந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே கடந்த ஆட்சியாளர்களால் ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி, அவரிடத்தில் எந்தவிதமான அழுத்தமும் தராமல் வலியுறுத்தலும் செய்யாமல் விட்டுவிட்டதுபோல் அல்லாமல், நிச்சயம் முதல்வர் இந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி, போதுமான அளவிற்கு அழுத்தமும் வலியுறுத்தலும் தந்து தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது என்றார் சுப்பிரமணியன்.

;