districts

மருத்துவத்துறையில் 4000 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: மா.சுப்பிரமணியன்

சென்னை, மே 10- மருத்துவத்துறையில் 4000 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அவற்றை விரைவில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து  வருவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேர வையில் செவ்வாயன்று கேள்வி நேரத்தின்போது, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், மருத்து வர்கள் பற்றாக்குறை நிலவு கிறது. அவசர சிகிச்சைக்காக மடத்துக்குளம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி விடு கின்றனர். எனவே, கூடுதலாக  மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன்,  மருத்துவர்கள், செவி லியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என 4,000 ஆயிரம் பேரை  புதிதாக நியமிக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள மருத்துவமனையிலும் காலிப் பணியிடம் நிரப்பப் படும் என தெரிவித்தார். நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஷாந வாஸ், நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனை வெறும் தகவல் வழங்கும் மையமாக இயங்கி வரு கிறது.  அங்கு சிகிச்சைக்கு சென்றால் திருவாரூர், தஞ்சாவூர் மருத்துவம னைக்கு செல்லுங்கள் என்று சொல்லும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி அங்கு போதிய மருத்துவர் களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், நாகப்பட்டினம் மருத்துவமனையில் அண்மையில்தான் புதிய  மருத்துவக் கல்லூரி மருத்து வமனை திறந்து வைக்கப் பட்டுள்ளது. நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நிச்சயம் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.

;