கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி, ஆக. 18- கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலி யர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வாலிபர் சங்க வட்டார மாநாடு வலியுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி 17வது வட்ட மாநாடு வழக்கறிஞர் எம். ஹரி கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. எம்.சுரேஷ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் மு.சிவக்குமார் துவக்க உரையாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை வாழ்த்திப் பேசினார். மாநாட்டை நிறைவு செய்தும் மாவட்ட செயலாளர் எம்.கே.பழனி பேசினார். நிர்வாகிகள் தேர்வு வே.சந்திரபோஸ் வட்டத் தலைவராகவும், எம்.ஹரி கிருஷ்ணன் செயலாளராக வும், எம்.சுரேஷ் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்ட னர். 13 பேர் வட்டக் குழு உறுப்பி னர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட தலை மையாகக் கொண்டு இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி அமர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து வகை நோய்களுக்கும் மருந்து மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும், இருதய மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும், எம்ஆர்ஐ, ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 30 அன்று அரசு மருத்துவக்கல்லூரி முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்து வது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.