tamilnadu

புதுப்பட்டினம் மீனவ பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு, டிச. 27- செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் குப்பம் பகுதியில் 800க்கும்  மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்த பகுதியில் தொடர்ந்து கடந்த 30 ஆண்டு களாக கடல் அரிப்பால் குடியிருப்புகள் சேதமடைந்து  வருவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள னர்.   மேலும் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை  இல்லாததால் எங்கள் குடியிருப்புகளை இழந்துள் ளோம். கரையில் மீன்பிடி படகுகளை நிறுத்தவும் மற்றும் வலைகளை உலர்த்த உரிய இடமில்லாமல், கரை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாழ்வா தாரத்தை இழுந்துள்ளோம். புதுப்பட்டினம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் தரப்பில் பல முறை மனு அளித்தும் நடவடிக்கையில்லை எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் புதுப்பட்டினம் மீனவர்  பஞ்சாயத்து சபை சார்பில் மீன்வளத்துறை அமைச்சரி டம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இம்மனு  மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு மீன்  வளத்துறை அமைச்சகம் மனுவை அனுப்பியுள்ளது. இதுகுறித்து, மேற்கண்ட பகுதியை சேர்ந்த மீன வர்கள் கூறுகையில்,   கடல் அரிப்பினால் ஆண்டு தோறும் எங்களது குடியிருப்புகளை இழந்து வருகி றோம். அதனால் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை உதவி  இயக்குநர் உள்பட அனைவரிடமும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  எனவே அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.  தூண்டில் வளைவு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

;