tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிராகரித்திடுக! கோட்டை முன்பு இன்று சிபிஎம் ஆர்ப்பாட்டம்

 சென்னை, மார்ச் 9 - குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி சென்னை கோட்டை முன்பு மார்ச் 9 (இன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.  மார்ச் 9 (இன்று) தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் துவங்குகிறது. இதையொட்டி இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  குடியுரிமையில் மதத்தை புகுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிராகரிக்க வலி யுறுத்தியும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்தின்படி மேற்கொள்ளக்கூடாது எனவும், இதன்தொடர்ச்சியாக மேற் கொள்ள திட்டமிடப் பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிராகரிக்க வலியுறுத்தியும் சென்னை கோட்டை முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் காலை 10  மணியளவில் மாபெரும் போராட் டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.   குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்ட த்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், மார்ச் 23 பகத்சிங் நினைவுதினத்தன்று தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டத் தை நடத்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;