தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையால் தென் மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
வடதமிழகம், புதுச்சேரி ஒரு சில இடங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.