tamilnadu

img

சுற்றுச்சூழலை பேரழிவிற்குள் தள்ளும் மத்திய அரசின் அறிவிப்பு: ஜவாஹிருல்லா

சென்னை:
சுற்றுச்சூழலை பேரழிவுக்கு தள்ளும் வகையில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகையே கொரோனா எனும் பேரிடர் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேலையில்  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  2006 சட்டத்தில் திருத்த வரைவினைக் கொண்டு வந்து இந்தியாவின் சூழலியலுக்கு மீது மிகப் பெரிய அச்சுறுத்தலை நிகழ்த்தி இருக்கின்றது மத்திய பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு.இந்த வரைவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் நாட் களை 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்திருப்பதும், மக்களிடம் கருத்துக் கேட்பு செயல் முறை கால நாட்களை 45ல் இருந்து 40 நாட்களாக குறைத் திருப்பதும், நிறுவனங்களின் செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்யும் காலத்தை 6 மாதத்தில் இருந்து 1 வருடமாக அதிகரித்திருப்பதும் இந்த அரசு மக்களுக்கான அரசு அல்ல கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான அரசு என்பதையே பறைசாற்றுகிறது.இவ்வாறு அந்த அறிக் கையில் அவர் கூறியுள்ளார்.

;