tamilnadu

img

புதுச்சேரி-தமிழகம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்...

சென்னை:
இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி வழியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளன.தமிழகம் மற்றும் புதுவையில் கொரானா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. இதனால் புதுச்சேரியிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தாக்கம் குறைந்ததால் ஜூன் மாத இறுதியில் புதுச் சேரியில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மட் டும் இயக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு பேருந்துகள் இயக் கப்படாததால் புதுச்சேரி மற்றும் தமிழக பேருந்து சேவைக்கு வழியின்றி மக்கள் தவித்தனர். இதனிடையே தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு  இயக் கப்படாமல் இருந்தன.இந்தநிலையில் புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி அளித்து சனிக்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கும், தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கும் தமிழக அரசு பேருந்து சேவை தொடங் கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலிருந்து சென்னை, கடலூர், விழுப்புரம், காரைக்கால், திருவண்ணாமலை உள்ளிட்ட மார்க்கங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங் கின. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கும், அங்கிருந்து புதுச் சேரிக்கும் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளன.முதல் நாளில் தமிழக அரசுப் பேருந்துகள், புதுச்சேரி அரசு பேருந்துகள் மட்டும் இயங்குகின்றன. பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதுச்சேரி பகுதியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில், கூட்ட நெரிசல் இன்றி குறைந்த அளவு பயணிகள் சென்றனர்.புதுச்சேரி- சென்னை, காரைக் கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு 60 சத பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

;