பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,684ஆக உள்ளது. அவர்களுள் 1,01,292 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 21,392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ,செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டது. இது மக்களுக்கு பெருமளவில் சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பேருந்து போக்குவரத்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் மாநில அரசு தொடங்கியுள்ளது.
பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதை வரவேற்றுள்ள பயணிகள், உரிய தனிமனித இடைவெளி கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.