புதுவையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்.2ல் துவக்கம்
புதுச்சேரி, ஆக. 30- பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் 40 விழுக்காடு நிதி வழங்கப்படுகிறது என்று முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் தெரி வித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை யில் வெள்ளியன்று கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயமூர்த்தி மருத்துவக் காப்பீட்டு திட்டம் குறித்து கேள்வி எழுப்பி னார். கேள்விக்கு பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், முதல மைச்சர் காப்பீட்டுத் திட்டம் புதுச்சேரியில் நடைமுறை யில் இல்லை. எனினும் பொருளாதாரத்தில் நலிவ டைந்த பிரிவைச் சேர்ந்த தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடை முறையில் உள்ளது. முதல் கட்டமாக பிரதம ரின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் திங்களன்று (செப்.2) புதுச்சேரியில் தொடங்கப்பட உள்ளது. 1.03 லட்சம் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவர். உறுப்பினர்களின் வேண்டு கோளுக்கிணங்க புதுச்சேரி யில் உள்ள அனைத்து குடும்பத்தினரையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்திற்கு மாநில அர சின் நிதியுதவி 40 விழுக்காடு வழங்கப்படுகிறது என்றார்.
ஆட்டோ தொழிலாளர் நலவாரியம்: சிஐடியு கோரிக்கை
புதுச்சேரி, ஆக. 30- ஆட்டோ தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை சிஐடியு வலியுறுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநி லங்களில் உள்ளதைப் போல் புதுச்சேரி பிரதேசத்தில் உள்ள ஆட்டோ தொழிலா ளர்களுக்கு தனி நலவாரி யத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும். போக்குவரத்துத் துறை யின் மூலம் பெறப்படும் வரியில் இரண்டு விழுக்காடு வரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அமைப்புசாரா நலச்சங்கத்தின் மூலம் வழங்கப்படும் பண்டி கைக்கால பரிசு கூப்பன் தொகையை ரூ. 3 ஆயிர மாக உயர்த்தி வழங்க அரசு ஆணை பிறபிக்க வேண்டும். மேலும் அமைப்புசாரா நலச்சங்கத்தை நலவாரிய மாக மாற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அரசு அறி விக்க வேண்டும் என்று சிஐ டியு புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் சீனு வாசன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளனர்.
காலமானார்
வேலூர். ஆக. 30- ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் யோபு (51) புதன் கிழமை (ஆக. 28) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மாவட்டச் செயலாளர் எம்.காசி, துணைச் செயலாளர் எம்.காசிநாதன், யோகலிங் கம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் என்.காசி நாதன், நகரச் செயலாளர் ரேணு, காளப்பன் உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வியா ழக்கிழமை (ஆக. 29) மாலை அடக்கம் செய்யப்பட்டது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
வேலூர், ஆக. 30- தொடக்கக் கல்வித் துறை அரசாணை நிலை எண் 145-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும், புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சோளிங்கர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் செ.ஆதித்தன் தலைமை தாங்கினார். செ.சரவணன், டி.ரஜினி, சி.கே.பெருமாள், ஜெயந்தி, மணிவண்ணன், மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் முருகேசன், லோகநாதன், ரங்கநாயகி, டி.சேனா சுந்தர் சிங் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
அண்ணாமலை பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்
சிதம்பரம், ஆக. 30- சிதம்பரம் அண்ணாமலை பல்க லைக் கழக நுண்கலை துறை சார்பில் கலாச்சார பரிவர்த்தனையில் இசை யும், நடனமும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன் தலைமையேற்று குத்து விளக்கேற்றி துவங்கி வைத் தார். சிறப்பு விருந்தினராக பத்ம ஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம், இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இசைத்துறை முனைவர் கிருபாசக்தி கருணா, பல்கலைக்கழக நுண்கலை துறை முதல்வர் முத்துராமன் ஆகி யோர் கலந்துகொண்டு உரையாற்றி னர். முன்னதாக இசைத்துறை தலை வர் குமார் வரவேற்றார். உதவிப் பேராசி ரியர் பிரகாஷ் நன்றியுரை கூறினார். இவ்விழாவில் பிற மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஆய்வாளர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரைகளை சமர்பித்தனர்.