மதுரவாயலில் கண்டனக்கூட்டம்
ஒன்றிய அரசு சமையல் எரிவாயு விலையை 50 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (ஏப்.12) நெற்குன்றத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் வி.தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சு.வெள்ளைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி, பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.மோகனகிருஷ்ணன், சி.வி.தாமோதரன், மவை.கிருஷ்ணமூர்த்தி, கோ.சிவா, எஸ்.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.
அண்ணா நகர் பகுதி, 107 வது வட்டம், எம்.எச் காலனி, இந்திரா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆன்லைன் பட்டா வழங்க கோரி ஞாயிறன்று (ஏப். 13) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தை கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தொடங்கி வைத்தார். அண்ணாநகர் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், கிளைச் செயலாளர் கோகுல் கண்ணன், ஆசாத்நகர் குமார், சுந்தர்ராஜ், விஜயன், செல்வம், லோகநாதன் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர்.
இசைக் கலைஞர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஞாயிறன்று (ஏப்.13) பெபி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்தியசென்னை வங்கி அரங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.வேணுகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமுஎகச மாநிலக் குழு உறுப்பினரும் பிரபல பாடகருமான கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் மறைவுக்கு தமுஎகச செங்கல்பட்டு மாவட்டக் குழுவின் சார்பாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. தமுஎகச மாவட்டச் செயலாளர் கவிசேகர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் , கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்
ஒன்றிய மோடி அரசு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தியதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கீழ்மருவத்தூர் பொறையூர் உள்ளிட்ட கிராமங்களில் நவரத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் க. ஜெயந்தி கண்டன உரையாற்றினார். எரிவாயு சிலிண்டருக்கு நாமம் போட்டு விறகு அடுப்பில் தேநீர் போட்டு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.