tamilnadu

img

நீதிபதி மீது தாக்குதல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீதிபதி மீது தாக்குதல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசியதை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப.கௌதம் முத்து தலைமை தாங்கினார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.ராமதாஸ், பொருளாளர் சி.குபேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் ஏ.லட்சுமணன், ச.குமரன், சிஐடியு கே.நாகராஜ் மற்றும் ஜனநாயக மனித உரிமை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.