பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கவும், கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் எனப் பதியப்படுவதாகவும் பதிவுத்துறையில் மோசடி புகார்கள் எழுந்தது. இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் நோக்கில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.