tamilnadu

img

முடக்க முடியாத திட்டங்கள்

“மத்தியில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற மோடி ஆட்சியையும், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் ஆட்சியையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், கிராமப்புற மாணவர்களின் மீது அக்கறை கொண்டு காலை உணவுத் திட்டம் என மக்கள் நலத்திட்டங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இதுபோன்ற திட்டங்களை இனி யார் வந்தாலும் முடக்க முடியாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.