tamilnadu

உலகின் மிதவை அணு மின் நிலையத்தில் உற்பத்தி தொடக்கம்

சென்னை, ஏப். 27-அணுமின் உற்பத்திக் கான ரஷ்ய நாட்டு அரசு நிறுவனமான “ரொசாட்டம்” தனது முதல் மிதவை அணு மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. அகடமிக் லொமோனோசவ் என பெயரிடப் பட்டுள்ள இந்த மின் நிலையத்தின் முதல் அலகில் அண்மையில் தொடங்கிய மின் உற்பத்தி, 10 சதவீத அளவை எட்டியுள்ளது. உலகலாவிய அணு மின் உற் பத்தித் துறையில், இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல் கல் எனச் சொல்லலாம். இதுகுறித்து பேசிய ரொசாட்டம் அரசு அணு மின் நிலையத்தின் தலைமை செயல் அதிகாரியான அலெக்ஸி லிக்காசெவ் “நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தேவையான அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளோம். எனவே, வரும் இலையுதிர் காலத் தின்போதே ‘அகடமிக் லொமோனோசவ்’ எனும் இந்த மிதவை மின்நிலையத்தை ரஷ்ய நாட்டின் பெவிக் துறைமுகத்துக்கு கொண்டு செல்வோம். எளிதில் சென்றடைய இயலாத, சவால் நிறைந்த பூகோளப் பகுதிகளில் தேவைப்படும் மின்சாரத்திற்கு இதுபோன்ற மிதவை அணு மின் உற்பத்தி நிலையம் ஒன்றுதான் மிகச் சரியான தீர்வாக இருக்க முடியும் என்றார்.ரஷ்யா மின் கட்டமைப்பில் இருந்து தனித்து நிற்கும் ஆர்டிக் பெருங்கடல் பகுதி தீவுகள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தத் திட்டத்தை, எங்களது நிறுவன தயாரிப்பில் ஒரு புதிய அம்சமாகவே கருதுகிறோம்” என்றும் அவர் தெரிவித்ததாக சென்னையில் வெளியான ரொசாட்டம் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

;