தனியார் ஆலை தொழிலாளர் போராட்டம் மாவட்ட நிர்வாகம் தலையிட சிஐடியு கோரிக்கை
கடலூர், செப். 15- கடலூர் சிப்காட் தொழில் வளாகத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலை யில், வெளியாட்களை வைத்து சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடலூர் சிப்காட் தொழில் வளாகத்தில் இயங்கிவரும் கௌமென் பார்மா தொழிற்சாலை யில் சுமார் 132 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் 25 புதிய தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவும், 8 நிரந்தர தொழிலாளர்களுக்கு ஒப்பந்தத்தை அமல்படுத்தவும் கோரி கடந்த ஜனவரி 17 மற்றும் பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கப்பட்டது. மார்ச் 18ம் தேதி தொழிலாளர் உதவி ஆணையர் அலு வலகத்தில் விவாதம் எழுப்பப்பட்டு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பேச்சுவார்த்தை நிலு வையில் இருந்தபோது கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொழிற்சாலையில் பணிபுரிந்த 48 ஒப்பந்த தொழிலாளர்களை நிறுத்திவிட்டு, அவர்கள் செய்து வந்த வேலையை நிரந்தர தொழி லாளர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என நிர்வாகம் வலியுறுத்தியது. நிர்வாகம் தொழி லாளர்களின் கோரிக்கையை ஏற்காததால் செப்டம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தத்தை உடைக்கும் வித மாக தொழிற்சாலைக்கு சம்பந்தமில்லாத வெளி யாட்களை பணிக்கு அமர்த்தி நிர்வாகம் சட்ட விரோதமாக உற்பத்தியை நடத்துவதாக தொழி லாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் சட்டொழுங்குப் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளதாகவும், 109 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.