tamilnadu

img

காணும் பொங்கல்: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மாமல்லபுரம், ஜன. 16- காணும் பொங்கலன்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என்ப தால் கூட்ட நெரிசலை தவிர்க்க  காவல்துறை உரிய ஏற்பாடு களைச் செய்துவருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு வருகை  தரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் வெளி மாநிலங்களில் இருந்தும், மாமல்லபுரத்திற்கு வந்து  செல்கின்றனர். மாமல்ல புரத்தில் அர்ஜுணன் தபசு,  ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோயில் ஆகிய பகுதி களைச் சுற்றிப்பார்த்து விட்டு  இறுதியில் மாமல்லபுரம் கடற்கரைக்கு வருவோர் பெரும்பாலும் கடலில் இறங்கி குளிக்க முற்படு வதைக் காவலர்களால் தடுக்க முடிவதில்லை. இந்நிலையில் மாமல்ல புரத்திற்கு காணும் பொங்  கல் அன்று அதிகளவில் சுற்று லாப் பயணிகள் வருகை இருக்கும் என்பதால் காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடற்கரை பகுதியில் தடுப்பு அமைப்பது, வாகன நிறுத்தும் இடங்களை ஏற்பாடு செய்வது, குடி தண்ணீர் மற்றும் கழிப்பறை கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதுகுறித்து மாமல்ல புரம் துணை கண்காணிப்பா ளர் சுந்தர வதனம் கூறுகை யில், கோவளம், திரு விடந்தை, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் 450 காவ லர்கள் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட உள்ளனர். மாமல்லபுரம் நகருக்குள் அரசு பேருந்து உள்ளிட்ட தனியார் வாகனங்கள் வரு வதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. மாமல்லபுரம் வரும் வாகனங்கள் மாமல்ல புரம் அருகிலுள்ள கொக்கில மேடு, கருகாத்தமன் கோயில் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் நிறுத்தப்படும். பொதுமக்கள் நகருக்குள் செல்வதற்கு மாவட்ட காவல்துறை சார்பில் சேர்  ஆட்டோ, ஆட்டோ, மினி வேன் ஏற்பாடுகள் செய்யப்  பட்டுள்ளது. மேலும் கடற்  கரை பகுதியில் பொதுமக் கள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்  பகுதியில் தடுப்புக் கட்டை கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப் பான முறையில் மாமல்ல புரத்தைக் கண்டுகளிக்க உரியப் பாதுகாப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளதாகத் தெரிவித்தார்.

;