“ஐம்பதாண்டு காலம் தமிழ்நாடு அரசியலில் மையப்புள்ளியாக இருந்த கலைஞர் ஆதரவு/கலைஞர் வெறுப்பு என்னும் அதிமுகவின் அரசியல் ஆயுதத்தை திடீரென இம்முறை கையில் எடுத்திருக்கிறது நாம் தமிழர். தீவிர அரசியலுக்குள் விஜய் நுழையும்போது கலைஞர் எதிர்ப்பையும் திமுக எதிர்ப்பையும் இன்னும் தீவிரப்படுத்துவார் சீமான். கலைஞரை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அது அவர் பிறந்த சாதியிலிருந்து தொடங்குவது இழிவானது. அருவருப்பானது. பிறப்பின் அடிப்படையில் எவர் ஒருவரையும் அடையாளப்படுத்துவதும் நிராகரிப்பதும் நம் தமிழ் மண்ணின் அரசியலுக்கு நேர் எதிரானது. அதன் பெயர் வர்ணாசிரமம்” என ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் விமர்சித்துள்ளார்.